பெண்களுக்கு அழகு வரி?
தினமலரில் படித்தது.
"எங்க நாட்டில் 40 சதவீதம் வரிமான வரி வசூலித்துக் கொண்டாலும், குடிமக்களின் அடிப்படைத்தேவைகள், மருத்துவம் உட்பட அரசாங்கமே கவனிச்சுக்கறதாலே,வரிச்சுமை தெரியறது இல்லே எங்களுக்கு..." என் கூறினார் ஆஸ்திரேலிய நாட்டில் குடியேறிய மதுரைக்கார நண்பர் ஒருவர்.
அட போங்க சார்... இங்கே எது எதுக்கெல்லாமோ புதுப்புது வரியா போட்டுத்தள்ளுராங்க... இன்னும் எது எதுக்குப் போடலாமுன்னு தெரியாம முழிச்சுகிட்டுக் கிடக்காங்க... வரிய ஏய்க்கிறவங்களும் புது புது பிளான் போட்டு ஏமாத்திக்கிட்டும் இருக்காங்க " மது பெட்ரோல், பஸ் கட்டணம் இந்த மூன்றும் தான் எப்பவும் மாட்டுது.
எனக்கு இன்னொரு யோசனையும் தோணுது... " என்ற குப்பண்ணா, சிறிது நிறுத்துவிட்டு மீண்டும் பேசத்தொடங்கினார்....
"பெண்களுக்கெல்லாம் அழகு வரி போடலாம்! ஏராளமாக பணம் சேறும்! அந்தந்தப் பெண்ணையே அவள் அழகுக்கு மதிப்பு போடும்படி சொல்லிவிட வேண்டும், மதிப்பின் உயர்வுக்குத் தகுந்தமாதிரி வரியையும் உயர்த்திப்
போடவேண்டும்? தன் அழகு விஷயத்தில் எந்தப்பெண்ணும் குறைச்சலா மதிப்புப் போடவே மாட்டாள்; தாராளமாக நடந்து கொள்வாள்!"
என்றார்.
---- பெண்களே, குப்பண்ணாவின் யோசனை எப்படி?
என்னைப்பொருத்தவரையில் பிரம்மச்சாரிகளுக்கும் சேர்த்து மிகுவரி போடவேண்டும்.

